செய்திகள்

ரஞ்சி இறுதிப்போட்டி: 224 ரன்களுக்கு ஆட்டமிழந்த மும்பை!

DIN

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் விளையாடிய மும்பை 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (மார்ச் 10) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சைத் தேர்வு செய்ய மும்பை முதலில் பேட் செய்தது.

மும்பை அணி 64.3 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்குர் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக பிரித்வி ஷா 46 ரன்களும், பூபென் லால்வானி 37 ரன்களும் எடுத்தனர். விதர்பா தரப்பில் ஹர்ஷ் துபே மற்றும் யஷ் தாக்குர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஆதித்யா தாக்கரே ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, விதர்பா தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT