செய்திகள்

ரஹானே, முஷீர் கான் அரைசதம்: மும்பை 260 ரன்கள் முன்னிலை!

DIN

விதர்பாவுக்கு எதிரான ரஞ்சி இறுதிப்போட்டியில் மும்பை அணி 260 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று (மார்ச் 10) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற விதர்பா பந்துவீச்சைத் தேர்வு செய்ய மும்பை முதலில் பேட் செய்தது.

மும்பை அணி 64.3 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷர்துல் தாக்குர் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து அதிகபட்சமாக பிரித்வி ஷா 46 ரன்களும், பூபென் லால்வானி 37 ரன்களும் எடுத்தனர். விதர்பா தரப்பில் ஹர்ஷ் துபே மற்றும் யஷ் தாக்குர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஆதித்யா தாக்கரே ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய விதர்பா முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 31 ரன்கள் எடுத்திருந்தது. அதர்வா டைடு 21 ரன்களுடனும், ஆதித்யா தாக்கரே 0 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மும்பையைக் காட்டிலும் விதர்பா 193 ரன்கள் பின் தங்கியிருந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. மும்பை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விதர்பா 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக யஸ் ரத்தோட் 27 ரன்களும், அதர்வா டைடு 23 ரன்களும் எடுத்தனர். மும்பை தரப்பில் தவால் குல்கர்னி, ஷாம்ஸ் முலானி மற்றும் தனுஷ் கோட்டியான் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷர்துல் தாக்குர் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார். இதன்மூலம் மும்பை அணி 100 ரன்களுக்கும் அதிகமாக முன்னிலை பெற்றது.

இதனையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய மும்பை இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் அஜிங்க்யா ரஹானே 58 ரன்களுடனும், முஷீர் கான் 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மும்பை அணி விதர்பாவைக் காட்டிலும் 260 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபிக்கு எதிராக தில்லி கேப்பிடல்ஸை வழிநடத்தப்போவது யார் தெரியுமா?

கவனத்தை ஈர்க்கும் விக்ரமின் 'வீர தீர சூரன்’ போஸ்டர்!

மோடியுடன் நேருக்கு நேர் விவாதம்: ராகுல் காந்தி சம்மதம்!

வயது முதிர்ந்த போதிலும்... எம்.எஸ்.தோனிக்காக சிஎஸ்கேவின் தரமான பதிவு!

7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT