செய்திகள்

ஐபிஎல் போட்டிகளுக்கு ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும்.

DIN

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளது. ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் டிக்கெட் விற்பனைக்கான தேதி குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

SCROLL FOR NEXT