சாம்பியன் பட்டம் வென்றார் காா்லோஸ் அல்கராஸ்!
இண்டியன் வெல்ஸ் ஓபனில், ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் அல்கராஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவில் நடைபெறும் மாஸ்டா்ஸ் டென்னிஸான இண்டியன் வெல்ஸ் ஓபனில், ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ் - ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்தினர்.
முதல் செட்டில் மெத்வதெவ் 3-0 என முதலில் ஆதிக்கம் செலுத்தினார். அல்கராஸ் புத்துணர்வுடன் மீண்டு வந்து, 7-6 என முதல் செட்டினை வென்றார். அடுத்த செட்டில் மெத்வதேவ்-க்கு வாய்ப்பே அளிக்காமல் 6-1 என்ற கேம்களில் அசத்தல் வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.
இது இவருக்கு 2வது இண்டியன் வெல்ஸ் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விம்பிள்டனுக்குப் பிறகு அல்கராஸ் பெறும் முதல் கோப்பை என்பதால் நெகிழ்ச்சியுடன் பேசினார்.
Advertisement
Advertisement
கடந்தாண்டும் மெத்வதேவ் அல்கராஸிடம் இண்டியன் வெல்ஸ் ஓபனில் தோற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.