படம் | ஐசிசி
செய்திகள்

ஓய்வு முடிவை திரும்ப பெற்ற பிரபல பாகிஸ்தான் வீரர்!

பிரபல பாகிஸ்தான் வீரர் ஒருவர் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார்.

DIN

பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிம் தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் வீரர் இமாத் வாசிம் கடந்த ஆண்டு நவம்பரில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடியதைத் தொடர்ந்து அவர் தனது ஓய்வு முடிவை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது: எனது ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பெறுவதற்கு நான் தயாராக உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மீது நம்பிக்கை வைத்ததற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி கூற கடைமைப் பட்டிருக்கிறேன். பாகிஸ்தானுக்காக எனது சிறப்பான பங்களிப்பை வழங்க காத்திருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய இமாத் வாசிம் 126 ரன்கள் மற்றும் 12 விக்கெட்டுகள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

SCROLL FOR NEXT