இந்திய அணி வீரர்கள்  படம் | பிசிசிஐ (எக்ஸ்)
செய்திகள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது? பிசிசிஐ தகவல்!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

DIN

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏப்ரல் மாத கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடத்தப்பட உள்ளன.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏப்ரல் மாத கடைசி வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: ஏப்ரல் இறுதியில் ஐபிஎல் தொடரின் ஒரு பாதி நிறைவு பெற்றுவிடும் என்பதால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. ஐபிஎல் தொடரில் முதல் பாதியில் விளையாடிய போட்டிகளிலிருந்து வீரர்களின் செயல்பாடு, உடல் தகுதி ஆகியவற்றை தேர்வுக் குழு உறுப்பினர்கள் மதிப்பிட முடியும். லீக் போட்டிகள் முடிந்தவுடன், இந்திய அணி வீரர்கள் சிலர் நியூயார்க் செல்ல வேண்டியிருக்கும். ஐபிஎல் தொடரின் கடைசி 4 போட்டிகளில் விளையாடாத வீரர்கள் உடனடியாக நியூயார்க் செல்வர் எனத் தெரிவித்தார்.

டி20 உலகக் கோப்பைக்கான அணியை அறிவிக்க மே 1 ஆம் தேதி வரை ஐசிசி கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், மே 25 ஆம் தேதி வரை அணியில் உள்ள வீரர்களில் மாற்றம் செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT