முகப்பு
செய்திகள்

டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா 3-வது வீரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய வீரர்

டி20 உலகக் கோப்பைத் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி எந்த இடங்களில் களமிறங்க வேண்டும்.

Updated On : 3 மே, 2024 at 1:23 PM
பகிர்:

டி20 உலகக் கோப்பைத் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி எந்த இடங்களில் களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடர் வருகிற ஜூன் 1 முதல் தொடங்கவுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அண்மையில் அறிவித்தது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலியை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கி ரோஹித் சர்மா 3-வது இடத்தில் களமிறங்கவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜியோ சினிமாவில் அவர் பேசியதாவது: டி20 உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் எனக் கூறுவேன். ரோஹித் சர்மா 3-வது இடத்தில் களமிறங்கி விளையாட வேண்டும். மூன்றாவது இடத்தில் களமிறங்கும்போது அவருக்கு ஆட்டத்தின் போக்கை புரிந்துகொள்ள சிறிது நேரம் கிடைக்கும். விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும்போது பவர் பிளேவில் அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →