செய்திகள்

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

பிரபலமான மேற்கிந்திய தீவுகள் அணியின் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா ஜெய்ஸ்வாலை புகழ்ந்து பேசியுள்ளார்.

DIN

2023ஆம் ஆண்டு டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அறிமுகமானார் இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால். 22 வயதாகும் ஜெய்ஸ்வால் 9 டெஸ்ட் போட்டிகளில் 1028 ரன்களை அடித்துள்ளார். இதில் 2 இரட்டை சதங்கள், 3 சதங்கள், 4 அரைசதங்கள் அடங்கும்.

டெஸ்ட் போட்டியில் பிரைன் லாரா 400 ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இதுவரை யாரும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை. லாரா தற்போது சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.

ஐபிஎல் போட்டிகளின்போது சந்தித்து கொண்ட லாரா ஜெய்ஸ்வால் புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில் லாரா ஜெய்ஸ்வால் குறித்து பேசியதாவது:

எனது சாதனை ஆபத்தில் இருக்கிறது. ஜெய்ஸ்வால் அதை முறியடிக்க நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே இரண்டு இரட்டை சதங்கள் அடித்துவிட்டார். நல்ல தகுதியான பேட்டர்.

அவர் அற்புதமான வீரர் என்பதை மட்டுமே இப்போது சொல்ல முடியும். அவரிடம் பிடித்தது என்னவென்றால் மிகவும் பணிவாக இருக்கிறார். கற்றலில் ஆர்வமாக இருக்கிறார். நான் ஜெய்ஸ்வாலை முதன்முதலில் பார்த்தபோதே (கடைசி வருடம்) அவரிடம் உணர்ச்சிபூர்வமாக ஒன்றிவிட்டேன். நான் ஒருமுறை அவரை விடுதியில் சந்தித்தேன். 4 மணிக்கு கிளம்புவேன் என கூறியதும் அவர் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தார். அது அவரது தனித்தன்மை.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்றுகொள்ள முயற்சிக்கிறார். எங்களது உரையாடல்கள் அவரை எப்படி இன்னும் நல்ல கிரிக்கெட்டர் ஆக்குவது என்பதே. எனது தொலைபேசி எண்ணை வைத்திருக்குபவருக்கு நான் எப்போதும் தொடர்புகொள்ள கூடியவனாக இருக்கிறேன். கிரிக்கெட்டை பற்றி பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

இந்த ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் 11 போட்டிகளில் 320 ரன்கள் எடுத்துள்ளார். முதலில் சொதப்பிய ஜெய்ஸ்வால் தற்போது நல்ல ஃபார்மில் விளையாடி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT