விராட் கோலி (கோப்புப்படம்) 
செய்திகள்

விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: முன்னாள் இந்திய கேப்டன்

டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை இந்திய அணி நிர்வாகம் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும்.

DIN

டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை இந்திய அணி நிர்வாகம் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் விராட் கோலி நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஃபார்மில் உள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார் விராட் கோலி. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 634 ரன்கள் குவித்துள்ளார்.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பையில் விராட் கோலியை இந்திய அணி நிர்வாகம் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

சௌரவ் கங்குலி

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விராட் கோலி மிக அருமையாக விளையாடுகிறார். நேற்றையப் போட்டியில் விராட் கோலி 90 ரன்களை குறைந்த பந்துகளில் அடித்தார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அவர் களமிறக்கப்பட வேண்டும். ஐபிஎல் தொடரில் அவரது கடைசி சில இன்னிங்ஸ்கள் மிகவும் சிறப்பானதாக இருந்தது என்றார்.

டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற ஜூன் 1 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமதா இஷ்டி யாகத்துக்கான கலசங்கள் ஒப்படைப்பு

பனித்துளி... பிரியங்கா மோகன்!

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT