ஷகிப் அல் ஹசன் படம் | ஐசிசி
செய்திகள்

ஐசிசி தரவரிசை வெளியீடு: ஷகிப்புடன் முதலிடத்தை பகிர்ந்து கொள்ளும் இலங்கை வீரர்!

டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையை ஐசிசி அண்மையில் வெளியிட்டது.

DIN

டி20 போட்டிகளில் சிறந்த பந்துவீச்சாளர்கள், பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையை ஐசிசி அண்மையில் வெளியிட்டது.

ஐசிசி வெளியிட்டுள்ள இந்த தரவரிசையில் ஆல்ரவுண்டர்களில் வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் மற்றும் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா தலா 228 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளனர். அடுத்தடுத்த இடங்களில் முகமது நபி (218 புள்ளிகள்), சிக்கந்தர் ராஸா (210 புள்ளிகள்) மற்றும் அய்டன் மார்கரம் (205 புள்ளிகள்) ஆகியோர் உள்ளனர். இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹார்திக் பாண்டியா 185 புள்ளிகளுடன் மார்கஸ் ஸ்டாய்னிஸுக்கு அடுத்தபடியாக 7-வது இடத்தில் உள்ளார்.

வனிந்து ஹசரங்கா

பேட்டிங்கை பொறுத்தவரை, 861 புள்ளிகளுடன் இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் பில் சால்ட் 802 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (781 புள்ளிகள்), பாபர் அசாம் (761 புள்ளிகள்) மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளனர். அய்டன் மார்கரம் (755 புள்ளிகள்) ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 714 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சை பொறுத்தவரை, இங்கிலாந்து அணியின் அடில் ரஷீத் 726 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 687 புள்ளிகளுடன் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கா இரண்டாவது இடத்திலும், 664 புள்ளிகளுடன் மேற்கிந்தியத் தீவுகளின் அகீல் ஹொசைன் மூன்றாவது இடத்திலும், 660 புள்ளிகளுடன் அக்‌ஷர் படேல் நான்காவது இடத்திலும் மற்றும் 659 புள்ளிகளுடன் இலங்கையின் மஹீஷ் தீக்‌ஷனா ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT