ஒக்ஸானா மாஸ்டர்ஸ்  படம் | எக்ஸ்
செய்திகள்

பாரா சைக்கிளிங்: 8-வது தங்கம் வென்றார் ஒக்ஸானா!

பாரா சைக்கிளிங்கில் அமெரிக்க வீராங்கனை ஒக்ஸானா மாஸ்டர்ஸ் 8-வது தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

DIN

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் பாரா சைக்கிளிங்கில் அமெரிக்க வீராங்கனையான ஒக்ஸானா மாஸ்டர்ஸ் 8 ஆவது தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பல விளையாட்டுகளில் புகழ்பெற்றவரான ஒக்ஸானா மாஸ்டர்ஸ் புதன்கிழமை 23 நிமிடங்கள் 45.20 வினாடிகளில் இலக்கை கடந்து நெதர்லாந்தின் சாண்டல் ஹெனெனைவிட 6.24 வினாடிகள் முன்னதாகவும், சீனாவின் சன் பியான்பியனைவிட 1 நிமிடம் 27.87 வினாடிகள் முன்னதாகவும் முடித்து சாதனைப் படைத்தார்.

ஒக்ஸானா மாஸ்டர்ஸ் இதுவரை கோடை மற்றும் குளிர்கால பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் 8 தங்கப்பதக்கங்கள் உள்பட 18 பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார்.

ஒக்ஸானா மாஸ்டர்ஸ் 1989 ஆம் ஆண்டில் உக்ரைனில் உள்ள செர்னோபில் அருகே பிறந்தார். செர்னோபில் உலகின் மிக மோசமான அணுசக்தி விபத்து ஏற்பட்ட இடமாகும். அணுசக்தி விபத்துக்குப் பிறகு இங்கு பிறக்கும் குழந்தைகள் குறைபாடுடன் இருப்பதாக நம்பப்படுகிறது. ஒக்ஸானா மாஸ்டர்ஸ் குழந்தையாக இருந்தபோது அமெரிக்க பெண் ஒருவரால் தத்தெடுக்கப்பட்டார்.

ஒக்ஸானா மாஸ்டர்ஸ் 9 வயதாக இருந்தபோது கதிர்வீச்சு பாதிப்பால் அவரது இடது முழங்காலுக்கு அருகில் துண்டிக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 14 வயதில் வலது காலும் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பிரதமர் அலுவலகம் ‘சேவா தீர்த்’ தயார்: 1947-க்கு பின் முதல்முறையாக இடமாற்றம்!

சிறையில் காலமானார் வங்கதேச பாடகர் புரோலாய் சாகி

எச்.சி.எல் 3வது காலாண்டு நிகர லாபம் 11% சரிவு!

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

SCROLL FOR NEXT