2022 ஆம் ஆண்டு உலகக் கோப்பையுடன் மகளிர் அணி கேப்டன்கள்  (கோப்புப் படம்)
செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை: 18 வயதுக்குள்பட்டோருக்கு அனுமதி இலவசம்!

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளிக்க 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை 18 வயதுக்கு உள்பட்டவர்கள் இலவசமாக நேரில் கண்டுகளிக்கலாம் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கும் மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டி 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. 10 அணிகள் பங்கேற்கின்றன. 18 நாள்களில் 23 போட்டிகள் நடைபெறவுள்ளன.

லீக் போட்டிகள் துபை, ஷார்ஜா மைதானத்தில் மாறி மாறி நடைபெற இருக்கின்றன. அரையிறுதி ஆட்டங்கள் முறையே துபை மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும். இறுதிப்போட்டி துபையில் நடைபெறவுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமை நிர்வாகி ஜியோஃப் ஆல்லாரிடிஸ் போட்டியைக் காண வரும் 18 வயதுக்குள்பட்ட அனைவருக்கும் நுழைவுக்கட்டணம் இலவசம் என்று அறிவித்துள்ளார். மேலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டிக்கெட் விலை குறைந்தபட்சமாக 5 திர்ஹாம்களாகவும் இந்திய ரூபாய் மதிப்பில் 115 ரூபாய் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பைப் போட்டியில், குரூப் ஏ, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் ஆறு முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், பி பிரிவில் வங்கதேசம், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஸ்காட்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: 22 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு!

விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள்: சுங்கச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்!

பிஎஃப்ஐ கோப்பை: இறுதிச்சுற்றில் மஞ்சு, அங்குஷிதா

வடமேற்கு தில்லியில் 1.5 கிலோ ஹெராயின் போதைப் பொருளுடன் 2 போ் கைது!

விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி: ஒருவா் கைது

SCROLL FOR NEXT