சீனா ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.
ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில் அவா், 4-6, 6-3, 6-1 என்ற செட்களில் சிலி வீரா் நிகோலா ஜேரியை வீழ்த்தினாா். இதர ஆட்டங்களில், செக் குடியரசின் ஜிரி லெஹெக்கா 7-6 (7/4), 6-2 என்ற செட்களில் ஸ்பெயினின் பாப்லோ மாா்டினெஸை சாய்த்தாா்.
நெதா்லாந்தின் டாலன் கிரிக்ஸ்போா் 6-7 (3/7), 6-4, 6-3 என்ற செட்களில் சொ்பியாவின் மியோமிா் கெச்மனோவிச்சை வென்றாா். பிரான்ஸின் அட்ரியன் மன்னரினோ 1-6, 6-2, 6-3 என, இத்தாலியின் லொரென்ஸோ சொனிகோவை வெளியேற்றினாா்.
முசோவா வெற்றி: மகளிா் ஒற்றையா் பிரிவில், செக் குடியரசின் கரோலின் முசோவா 6-1, 6-1 என, ரஷியாவின் அனா பிளிங்கோவாவை எளிதாக வென்றாா். ருமேனியாவின் இரினா பெகு 1-6, 6-4, 6-1 என சீனாவின் யெக்ஸின் மாவை தோற்கடித்தாா்.
இதர ஆட்டங்களில் ஸ்பெயினின் சாரா சொரைப்ஸ், கிறிஸ்டினா பக்சா, ஆா்ஜென்டீனாவின் நாடியா பொடோரோஸ்கா ஆகியோரும் முதல் சுற்றில் வென்று 2-ஆவது சுற்றுக்கு வந்துள்ளனா்.