முகப்பு
செய்திகள்

டெஸ்ட் அணியில் தனக்கான இடத்தை உருவாக்க ஜெய்ஸ்வாலுக்கு அருமையான வாய்ப்பு: சுனில் கவாஸ்கர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணியில் தனக்கான இடத்தை தொடர்ச்சியாக உறுதிப்படுத்திக் கொள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:16 PM
பகிர்:

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணியில் தனக்கான இடத்தை தொடர்ச்சியாக உறுதிப்படுத்திக் கொள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் வருகிற ஜனவரி 25 ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணியில் தனக்கான இடத்தை தொடர்ச்சியாக உறுதிப்படுத்திக் கொள்ள யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்க ஆடுகளங்களைப் போல் இந்திய ஆடுகளங்கள் இருக்காது. இந்திய ஆடுகளங்களின் தன்மை வித்தியாசமானது. தென்னாப்பிரிக்க ஆடுகளங்களில் அதிக பௌன்சர்கள் இருக்கும். அந்த ஆடுகளங்களில் அனுபவம் வாய்ந்த வீரர்களே ரன் குவிக்கத் தடுமாறுவர். அதனால் யஷஸ்வி ஜெஸ்வாலுக்கு தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் மிகுந்த சவாலானதாக இருந்திருக்கும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் அவரது இடத்தை தொடர்ச்சியாக உறுதிப்படுத்திக் கொள்ள கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு. இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற இடதுகை தொடக்க ஆட்டக்காரர்கள் தேவை என்றார். 

இதுவரை இந்திய அணிக்காக 7  டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் 316 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments