பிரபல கால்பந்து வீரர் தாமஸ் முல்லர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மன் கிளப்பை விட்டுப் பிரிகிறார்.
ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பெயர்ன் மியூனிக் அணிக்காக 25 ஆண்டுகளாக விளையாடிவரும் தாமஸ் முல்லர் இந்த சீசனோடு அணியை விட்டு பிரிகிறார்.
35 வயதாகும் தாமஸ் முல்லர் பெயர்ன் மியூனிக் அணிக்காக 743 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த அணிக்காக ஒருவர் அதிகமான போட்டிகளில் விளையாடியதில் இவர்தான் முதலிடத்தில் இருக்கிறார்.
கடந்த 2,000ஆம் ஆண்டில் இந்த அணியில் சேர்ந்த தாமஸ் முல்லர் அட்டாகிங் மிட்ஃபீல்டர், செகண்ட் ஸ்டிரைக்கராக விளையாடி வந்தார்.
12 முறை புன்டெஸ்லீகா தொடரினையும் 2 முறை சாம்பியன்ஸ் லீக்கையும் 6 டிஎஃப்எக்ஸ் பட்டங்களையும் வென்றுள்ளார்.
தொடர்ச்சியாக 11 முறை புன்டெஸ்லீகா தொடரினை வென்றதில் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
பெயர்ன் மியூனிக் அணிக்காக 3-ஆவதாக அதிக கோல்கள் (247) அடித்துள்ளார். முதலிரண்டு இடங்களில் ஜெரால்ட் முல்லர் (565), லெவண்டாவ்ஸ்கி (344) இருக்கிறார்கள்.
சர்வதேச போட்டிகளில் 2024இல் ஓய்வை அறிவித்த தாமஸ் முல்லர் இந்த சீசனோடு பெயர் மியூனிக் கிளப் அணியில் இருந்தும் விலகுகிறார்.
ஜூன் 30 உடன் அவரது ஒப்பந்தம் முடிவடைகிறது. கிளப் உலகக் கோப்பை ஜூன் 14ஆம் தேதி முதல் தொடங்கவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.