ஒலிம்பிக்ஸ், ஐசிசி இலச்சினை படங்கள்: எக்ஸ் / ஒலிம்பிக்ஸ், ஐசிசி.
செய்திகள்

ஒலிம்பிக்ஸ் 2028: 6 கிரிக்கெட் அணிகளுக்கு மட்டுமே அனுமதி!

2028ஆம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்ஸுக்கு 6 கிரிக்கெட் அணிகள் மட்டுமே அனுமதி...

DIN

2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக்ஸுக்கு 6 கிரிக்கெட் அணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு 128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது என மகிழ்ச்சியான செய்து கிடைத்துள்ளது.

ஐசிசியில் முழுநேர உறுப்பினராக 12 அணிகள் இருக்கும் நிலையில் இதில் வெறுமனே 6 அணிகள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள், பெண்கள் பிரிவில் 6 அணிகள் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஒலிம்பிக்ஸ் 2028: டி20 வடிவில் கிரிக்கெட்

டி20 வடிவில் நடைபெறும் இதில் ஒவ்வொரு அணியிலும் 15 பேர் தேர்வுசெய்யப்பட்டு மொத்தமாக 90 பேர்கள் ஒலிம்பிக்ஸுக்கு தேர்வாக இருக்கிறார்கள்.

ஒலிம்பிக்ஸை நடத்தும் அமெரிக்க அணி தானாகவே தேர்வானதால் மீதமுள்ள 5 அணிகள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

இந்த அணிகள் தேர்வு முறைகள் குறித்து தற்போது எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 1,900ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் கிரிக்கெட் நடைபெற்றது. அது இரண்டுநாள் போட்டியாக நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி நெருங்குவதால் ஜவுளிக் கடைகளில் குவிந்த மக்கள்: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

14 குழந்தைகள் இறப்பு: ம.பி.யில் மருத்துவா் கைது! இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு!

ரயில்வே மேம்பாலத்தில் இரும்பு குழாய் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

‘கோல்ட்ரிஃப்’ மருந்து உற்பத்தி நிறுவன உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை: மா.சுப்பிரமணியன்

நாகநாத சுவாமி கோயில் பாலாலயம்

SCROLL FOR NEXT