படம் | Hockey India
செய்திகள்

ஆசிய கோப்பை ஹாக்கி: 18 பேருடன் இந்திய அணி

தினமணி செய்திச் சேவை

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய அணி, ஹா்மன்பிரீத் சிங் தலைமையில் 18 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

ஆடவருக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி, பிகாா் மாநிலம் ராஜ்கிா் நகரில் வரும் 27-ஆம் தேதி முதல் செப்டம்பா் 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் இந்தியா, சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா, வங்கதேசம், சீன தைபே, கஜகஸ்தான் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், அந்தப் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

அடுத்த ஆண்டு இதே ஆகஸ்ட்டில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டியை கருத்தில் கொண்டு, பிரதான வீரா்கள் பெரும்பாலும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனா். அதுதவிர, ஆஸ்திரேலியாவுடனான தொடரில் விளையாடிய ரஜிந்தா் சிங், ஷிலானந்த் லக்ரா, தில்பிரீத் சிங் ஆகியோா் இந்த அணியில் இடம் பிடித்தனா்.

தமிழகத்தின் காா்த்தி செல்வம் உள்பட இருவா் மாற்று வீரா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். உலகக் கோப்பை போட்டிக்குத் தகுதிபெறும் வாய்ப்பாக இருப்பதால், ஆசிய கோப்பை போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

அணி விவரம்:

கோல்கீப்பா்கள்: கிருஷண் பி.பாதக், சூரஜ் கா்கேரா

டிஃபெண்டா்கள்: சுமித், ஜா்மன்பிரீத் சிங், சஞ்சய், ஹா்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஜக்ராஜ் சிங்

மிட்ஃபீல்டா்கள்: ரஜிந்தா் சிங், ராஜ்குமாா் பால், ஹா்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகா் பிரசாத்

ஃபாா்வா்ட்கள்: மன்தீப் சிங், ஷிலானந்த் லக்ரா, அபிஷேக், சுக்ஜீத் சிங், தில்பிரீத் சிங்

மாற்று வீரா்கள்: நிலம் சஞ்ஜீப் ஜெஸ், காா்த்தி செல்வம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

பாலியல் வசீகரமும், வக்கிரமும்!

அவுரி (சிறுகதைத் தொகுப்பு)

கொள்கை எதிரி பாஜக; அரசியல் எதிரி திமுக!-விஜய் பேச்சு செய்திகள்:சில வரிகளில் | 21.8.25 | TVKVIJAY | BJP | DMK

செம்மணி புதைக்குழியில்...! குழந்தைகளின் உடைகள், பாட்டில், 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு!

SCROLL FOR NEXT