லீக்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்டர் மியாமி அணி 3-1 என வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்தப் போட்டியில் லியோனல் மெஸ்ஸி அசத்தலாக இரண்டு கோல்களை அடித்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.
அமெரிக்காவின் சேஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக்ஸ் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்டர் மியாமியும் ஆர்லண்டோ சிட்டியும் மோதின.
இந்தப் போட்டியில் முதல் பாதியின் கடைசி நேரத்தில் ஆர்லண்டோ சிட்டி 1-0 என முன்னிலைப் பெற்றது.
77-ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி பெனால்டியில் கோல் அடித்து 1-1 என சமன்செய்வார். பின்னர், 88-ஆவது நிமிஷத்தில் இன்னொரு கோல் அடித்து 2-1 என முன்னிலைப் பெறச் செய்தார்.
கடைசியில் டெலஸ்கோ செகோவியோ 90+1 ஆவது நிமிஷத்தில் கோல் அடித்து 3-1 என அபார வெற்றி பெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.