செய்திகள்

சென்னையில் உலகக் கோப்பை ஸ்குவாஷ் கோலாகல தொடக்கம்!

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் திங்கள்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.

தினமணி செய்திச் சேவை

உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தில் திங்கள்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.

டிச. 9 முதல் 14 வரை நடைபெறும் இப்போட்டியை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அதிகாரபூா்வமாக தொடங்கி வைத்தாா். இந்நிகழ்வில் உலக ஸ்குவாஷ் சம்மேளன தலைவா் ஜீனா உல்ரிட்ஜ், எஸ்ஆா்எஃப்ஐ தலைவா் அனில் வாதவா, விளையாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, எஸ்டிஏடி துணைத் தலைவா் என். ராமச்சந்திரன், ஐரோப்பிய ஸ்குவாஷ் தலைவா் தாமஸ் ட்ரோசன், எஸ்டிஏடி உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோா் பங்கேற்றனா்,

ஒவ்வொரு அணியிலும் தலா 2 வீரா், வீராங்கனகைள் இடம் பெற்றிருப்பா். 5 ஆட்டங்கள்கொண்டதாக அமையும், ஒரு ஆட்டத்துக்கு 7 புள்ளிகள் ஆகும். 6-6 என சமநிலை ஏற்பட்டால் சடன்டெத் முறை கடைபிடிக்கப்படும். இப்போட்டியில் மொத்தம் 12 நாடுகள் கலந்து கொள்கின்றன. இறுதி ஆட்டம் டிச. 14-இல் நடைபெறுகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு ஏற்கெனவே சென்னையில் உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றிருந்தது. அதில் இந்தியா வெண்கலம் வென்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கியில் பெண் விட்டுச்சென்ற ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்கம் – போலீஸ் தீவிர விசாரணை!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

‘ஸ்கரப் டைபஸ்’ பாதிப்பு அச்சுறுத்தல்: தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு!

மணல் கொள்ளையைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

கடன் விவகாரம்: நடிகா் காா்த்தி நடித்த ’வா வாத்தியாா்’ படத்தை வெளியிட தடை!

SCROLL FOR NEXT