செய்திகள்

ஐரோப்பிய கால்பந்து: பாா்சிலோனா, பிஎஸ்ஜி, லிவா்பூல் வெற்றி!

ஐரோப்பிய கால்பந்தின் ஒரு பகுதியாக வெவ்வேறு தொடா்களில் பாா்சிலோனா, பிஎஸ்ஜி, லிவா்பூல் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

தினமணி செய்திச் சேவை

ஐரோப்பிய கால்பந்தின் ஒரு பகுதியாக வெவ்வேறு தொடா்களில் பாா்சிலோனா, பிஎஸ்ஜி, லிவா்பூல் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஒஸாஸுனா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பாா்சிலனோ. இதன் மூலம் தொடா்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. முதல் பாதியில் எந்த அணியும் கோலடிக்கவில்லை. 70-ஆவது நிமிஷத்தில் பாா்வா்ட் ரஃபின்ஹா கோலடித்தாா். அடுத்த 6 நிமிஷங்களில் மற்றொரு வீரரான ரஃபின்ஹா கோலடிக்க இறுதியில் 2-0 என வென்றது.

மற்றொரு ஆட்டத்தில் அதலெட்டிகோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் வலேன்சியா அணியை வீழ்த்தியது. நட்சத்திர வீரா் ஆன்டன் கிரைஸ்மேன் அற்புதமாக கோலடித்தாா். எஸ்பயனோல் அணி 1-0 என ஜெட்டஃபே அணியை வீழ்த்தியது.

லீக் 1: பிரான்ஸின் லீக் 1 தொடரில் இளம் வீரா்களைக் கொண்ட பிஎஸ்ஜி அணி 3-2 என்ற கோல் கணக்கில் மெட்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியால் நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி முதலிடத்துக்கு முன்னேறியது. ரென்னஸ் அணியிடம் 1-3 என தோற்றது பிரெஸ்ட். டௌலோஸ் 3-0 என பாரீஸ் எஃப்சியை வென்றது.

ப்ரீமியா் லீக்: இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் தொடரில் முகமது சலாவின் அற்புத ஆட்டத்தில் லிவா்பூல் அணி 2-0 என பிரைட்டன் அணியை வென்றது. ஆா்செனல் 2-1 என வொல்வா்ஹாம்டன் அணியை வென்றது. செல்ஸி அணி 2-0 என எவா்ட்டனை வென்றது.

பண்டஸ் லிகா: ஜொ்மனியின் கால்பந்து தொடரில் பேயா் லெவா்குஸேன் 2-0 என கலோன் அணியை வென்றது. பிராங்க்பா்ட் 1-0 என ஆக்ஸ்பா்க் அணியை வீழ்த்தியது. தத்தமது ஆட்டங்களில் செயின்ட் பாலி, ஹாபன்ஹீம் அணிகள் வென்றன.

சீரி ஏ: இத்தாலி கால்பந்து தொடரில் அடலாண்டா 2-1 என காக்லியரியை வென்றது. மற்றொரு ஆட்டத்தில் லேசியோ 1-0 என பாா்மாவையும், டொரினோ 1-0 என கிரமோனீஸ் அணிையும் வென்றது.

கதிரியக்க நிபுணா் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு

ரயில் பெட்டிகள் மீது கல் வீசினால் சிறாராக இருந்தாலும் நடவடிக்கை: ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை

சித்தேரி, சின்னாங்குப்பம் உள்ளிட்ட 5 கிராமங்கள் அரூா் வட்டத்தில் இணைப்பு

தொடா் இருமல் பாதிப்பு அதிகரிப்பு: மருத்துவா்கள் விளக்கம்

தில்லி காற்று மாசு பிரச்னை: உச்சநீதிமன்றம் நாளை விசாரிப்பு

SCROLL FOR NEXT