இந்திய கால்பந்து அணி படம்: எக்ஸ் / இந்திய கால்பந்து அணி.
செய்திகள்

இந்திய கால்பந்து வீரர்கள் ஐரோப்பாவில் விளையாட தகுதியானவர்கள்..!

இந்திய கால்பந்து வீரர்கள் ஐரோப்பாவில் நடைபெறும் போட்டிகளில் விளையாட தகுதியானவர்களென டாம் அல்ரெட் கூறியுள்ளார்.

DIN

இந்திய கால்பந்து வீரர்கள் ஐரோப்பாவில் நடைபெறும் போட்டிகளில் விளையாட தகுதியானவர்களென டாம் அல்ரெட் கூறியுள்ளார்.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) போட்டிகள் விரைவில் முடிவடைய இருக்கின்றன.

இந்தப் போட்டியில் எம்பிஎஸ்ஜி (மோகன் பகன் சூப்பர் ஜெயண்ட்) அணி 21 போட்டிகளில் 49 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன. கடந்த 2022இல் இந்த அணிதான் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டனைச் சேர்ந்த டாம் அல்ட்ரெட் எம்பிஎஸ்ஜி அணியில் செண்ட்ரல் டிஃபெண்டராக விளையாடி வருகிறார். இந்தத் தொடரில் 2 கோல்கள், 13 பிளாக் செய்து அசத்தியுள்ளார்.

டாம் அல்ட்ரெட் இந்திய வீரர்கள் குறித்து கூறியதாவது:

ஐரோப்பியாவில் விளையாட தகுதியானவர்கள்

இங்கு சில சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். எம்பிஎஸ்ஜி அணியில் நான் பார்த்தவரைக்கும் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுகிறார்கள். இந்திய வீரர்கள் ஐரோப்பாவில் விளையாட என்ன செய்ய வேண்டும் என நான் சில வெளிநாட்டு வீரர்களுடன் பேசியுள்ளேன். அந்த அளவுக்கு இந்தியர்களின் தரம் மிகவும் நன்றாக இருக்கிறது என்றார்.

சுப்பைய்யா போஷ் ஐஎஸ்எல் 6 கோல்கள் அடித்து அசத்தினார். ஒரு டிபென்டர் அடித்த அதிகபட்ச கோல்கள் இது என்பது குறிப்பிடத்தக்கது.

39 டேகல்ஸ் செய்து அசத்தினார். 43 முறை எதிரணியின் பந்துகளை இடைமறித்துள்ளார். இது இந்தத் தொடரில் 2ஆவது அதிகபட்ச சாதனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆல்பர்டோ ரோட்ரிகோ 5 கோல்கள் அடித்து அசத்தினார். திபெந்து பிஸ்வாஸ் என்ற வீரரும் இந்த வரிசையில் முக்கியமான வீரராக இருக்கிறார். இவர் 81 சதவிகிதம் துல்லியமாக பந்தினை பாஸ் செய்து அசத்தியுள்ளார். 21 வயதாகும் இவர் 13 டேகல்ஸ், 36 டூயல்ஸ், 31 ரிகவரிஸ், 28 கிளியரன்ஸ், 2 அசிஸ்ட் செய்துள்ளார்.

எம்பிஎஸ்ஜி அணி 21 போட்டிகளில் 14 கோல்கள் மட்டுமே எதிரணியினருக்கு விட்டுக்கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தமுறை கோப்பை வெல்லப்போவதும் இந்த அணிதான்.

சமீபத்தில் இந்தியாவின் ஜெலெண்ட் சுனில் சேத்ரி ஓய்வை அறிவித்தார். மெஸ்ஸி, ரொனால்டா அளவுக்கு புகழப்பட வேண்டியவர் இந்திய அளவில் மட்டுமே புகழ்பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்து முன்னணி சாா்பில் 600 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

திருவாடானை,தொண்டி பகுதிகளில் இன்று மின்தடை

திருநங்கையருக்கான கொள்கை: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்ததாக டிஆா்டிஓ மேலாளா் கைது

மிருகங்களுக்கு உணவாக செல்லப் பிராணிகள்: டென்மாா்க் மக்களிடம் வேண்டுகோள்

SCROLL FOR NEXT