வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பார்சிலோனா வீரர்கள்.  படம்: ஏபி
செய்திகள்

இறுதிப் போட்டிக்கு தேர்வானது பார்சிலோனா!

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா 2-0 என அபாரமாக வெற்றி பெற்றது.

DIN

ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை அரையிறுதியில் பார்சிலோனா - அத்லெடிக் பில்பாவ் அணிகள் கிங் அப்துல்லா ஸ்போர்ட்ஸ் சிட்டி ஆடுகளத்தில் மோதிய அரையிறுதிப் போட்டியில் பார்சிலோனா 2-0 என அபாரமாக வெற்றி பெற்றது.

இதன்மூலம் பார்சிலோனா அணி ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

பார்சிலோனா அணியில் 17 நிமிஷத்திலும் 52ஆவது நிமிஷத்திலும் முறையே கவி, லாமின் யமால் கோல் அடித்து அசத்தினார்கள்.

கோல் அடித்த மகிழ்ச்சியில் லாமின் யமால்.

மற்றுமொரு அரையிறுதியில் ரியல் மாட்ரிட் அணியுடன் மல்லோர்கா அணி மோதுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி ஜன.10ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறுகிறது.

இதுவரை ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை தொடரில் பார்சிலோனா அணி 14 முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ரியல் மாட்டிட் 13 முறை வென்று இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இறுதிப் போட்டி ஜன.13 இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும். இறுதிப் போட்டியில் மீண்டும் ரியல் மாட்ரிட் - பார்சிலோனா அணிகள் மோதினால் எல் கிளாசிக்கோ போட்டியாக அமையும்.

கால்பந்து ரசிகர்கள் இந்தப் போட்டிக்கு மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவை பாதிப்பு!

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ரத்த வெள்ளத்தில் வாலிபர் சடலம்! கொலையா? தற்கொலையா?

எழுத்தாளர் கி.ரா. பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதிய உச்சத்தில் ரூ.83,000-ஐ நெருங்கிய தங்கம்! எகிறும் வெள்ளி விலை!

பரபரப்பான சூழலில் அமித் ஷாவை இன்று சந்திக்கும் இபிஎஸ்!

SCROLL FOR NEXT