துருக்கி வீராங்கனை ஜெய்னெப் சான்மெஜ். படம்: எக்ஸ் / ஜெய்னெப் சான்மெஸ்.
செய்திகள்

விம்பிள்டனில் முதல்முறை... துருக்கி வீராங்கனை நிகழ்த்திய வரலாற்றுச் சாதனை என்ன?

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சாதனை படைத்த துருக்கி வீராங்கனை குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 3-ஆவது சுற்றுக்குத் தகுதிபெற்ற முதல் துருக்கிய வீராங்கனையாக (ஆண்களும் தகுதிபெறாத நிலையில்) ஜெய்னெப் சான்மெஜ் சாதனை படைத்துள்ளார்.

புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகள் ஜூன் 23 முதல் தொடங்கி ஜூலை 13ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றன.

லண்டனில் நடைபெறும் இந்தப் போட்டிகள் டென்னிஸ் உலகில் மிகவும் புகழ்பெற்ற தொடராக இருக்கிறது.

இந்தத் தொடரில் முதல்முறையாக பங்கேற்ற துருக்கி வீராங்கனை ஜெய்னெப் சான்மெஜ் (23 வயது) 2-ஆவது சுற்றில் சீன வீராங்கனை ஜிங்யு வாங்கை 7-5, 7-5 என நேர் செட்களில் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறிய துருக்கி வீரராக சாதனை படைத்துள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 1968-இல் ஓபன் சுற்றுகள் தொடங்கின. அன்றுமுதல் இதுவரை துருக்கியில் இருந்து எந்தவொரு வீரர், வீராங்கனையும் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

1950-இல் பாஹ்தியே முஸ்லுவோக்லு பிரெஞ்சு ஓபனில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியிருந்தார். 75 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு துருக்கிய பெண் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

போட்டிக்குப் பிறகு, தனது நாட்டினருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டுமென அவரது தாயார் கூறியதாகக் கூறினார்.

போட்டியில் வென்ற பிறகு துருக்கிய ரசிகர்களுடன் ஜெய்னெப் சான்மெஜ் செல்ஃபி (தற்படம்) எடுத்துக்கொண்டார்.

Zeynep Sonmez became the first Turkish player in the professional era to reach the third round of a Grand Slam tournament by beating Xinyu Wang 7-5 7-5 at Wimbledon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை! ஊடகங்களுக்கு வங்கதேச அரசு எச்சரிக்கை!

அமித் ஷாவுக்கு தேநீர் விருந்து அளித்த நயினார் நாகேந்திரன்

சென்னையில் கனமழை

ஹீரோ ஆசிய ஹாக்கி 2025: கோப்பையை அறிமுகப்படுத்தினார் துணை முதல்வர் உதயநிதி!

இந்தியாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு!

SCROLL FOR NEXT