காயமடைந்த ஜமால் முசியாலாவை மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் காட்சி...  படம்: ஏபி
செய்திகள்

கால்பந்து உலகில் மீண்டும் சோகம்..! பயர்ன் மியூனிக் இளம் வீரர் மருத்துவமனையில் அனுமதி!

கிளப் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் நடந்த விபத்து குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

கிளப் உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் பயர்ன் மியூனிக் வீரர் ஜமால் முசியாலா (22) பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் கிளப் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், காலிறுதிப் போட்டியில் பிஎஸ்ஜி, பயர்ன் மியூனிக் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் முதல் பாதிக்கு முன்பாக பயர்ன் மியூனிக் வீரர் முசியாலா கோல் அடிக்க எதிரணியின் கோல் போஸ்ட் அருகே ஓடும்போது பிஎஸ்ஜி அணியின் கோல் கீப்பர் டோனாரும்மா பந்தைப் பிடிக்க விழுவார்.

அந்தச் சமயத்தில் ஓடி வந்துக்கொண்டிருந்த முசியாலாவின் கால்கள் டோனாரும்மா உடலின் மீது மோதி நிலைதடுமாறி கீழே விழுவார்.

முசியாலா கீழே விழுந்ததும் வலி தாங்காமல் அழுதது டோனாருமா உள்பட அனைத்து வீரர்களையும் நிலைகுலையச் செய்தது.

இந்த விபத்தில் முசியாலாவிற்கு ஃபைபுலா எனும் எழும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விரைவில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து குணமாக 4-5 மாதங்கள் ஆகுமெனக் கூறப்படுகிறது.

பிஎஸ்ஜி கோல் கீப்பர் டோனாரும்மா தனது இன்ஸ்டா பக்கத்தில் முசியாலாவை டேக் செய்து விரைவில் குணமாகி வரவேண்டும் என்ற வார்த்தைகளுடன் தான் வருத்தப்படும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

டோனாரும்மாவின் பதிவு

இரு அணிகளுமே முதல் பாதியில் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் பிஎஸ்ஜி அணியின் டியூ 78-ஆவது நிமிஷத்திலும், டெம்பேலே 90+6-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தார்கள்.

இந்தப் போட்டியில் 2-0 என பிஎஸ்ஜி வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

சில நாள்களுக்கு முன்பு லிவர்பூல் வீரர் ஜோடா கார்விபத்தில் உயிரிழந்த சோகத்தில் மூழ்கியிருந்த கால்பந்து உலகில் இந்த நிகழ்வு கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Bayern Munich's Jamal Musiala is taken off the field after an injury during the Club World Cup quarterfinal soccer match between PSG and Bayern Munich in Atlanta.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துல்கர் சல்மானுடன் நடிக்கும் ஷ்ருதி ஹாசன்!

நாட்டை நிறுவியர்கள் எதிர்பார்த்த இந்தியாவை உறுதிப்படுத்தவே: சுதர்சன் ரெட்டி!

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

மானே... ஜான்வி கபூர்!

ஆக. 26 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்!

SCROLL FOR NEXT