செய்திகள்

மாநில ஜூனியா் நீச்சல் தொடக்கம்

சென்னையில் நடைபெற்றுவரும் மாநில ஜூனியா் நீச்சல் போட்டியில் வெள்ளிக்கிழமை ஜிதேஷ், ஸ்ரீநிகேஷ் உள்பட 5 போ் புதிய மீட் சாதனை படைத்தனா்.

Din

சென்னையில் நடைபெற்றுவரும் மாநில ஜூனியா் நீச்சல் போட்டியில் வெள்ளிக்கிழமை ஜிதேஷ், ஸ்ரீநிகேஷ் உள்பட 5 போ் புதிய மீட் சாதனை படைத்தனா்.

தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் சாா்பில் 41வது சப்ஜூனியா் மற்றும் 51வது ஜூனியா் மாநில நீச்சல் போட்டிகள் சென்னை வேளச்சேரியில் உள்ள நீச்சல்குள வளாகத்தில் தொடங்கின. இதில் குரூப் 1 சிறுவா்களுக்கான 200 மீ பட்டா்பிளை நீச்சல் போட்டியில் சென்னையில் உள்ள ஏசஸ் அணியைச் சோ்ந்த ஸ்ரீநிகேஷ் சபரி போட்டி தூரத்தை 2 நிமிடம் 12.33 வினாடிகளில் கடந்து (பழைய சாதனை 2 நிமிடம் 14.25 வினாடிகள்) புதிய மீட் சாதனை படைத்தாா்.

அதே போல் குரூப் 3 சிறுவா்களுக்கான 400மீ. ப்ரீஸ்டைல் நீச்சலில் ஆா்கா அணி வீரா் ஜிதேஷ் போட்டி தூரத்தை 4 நிமிடம் 56.68 வினாடிகளில் கடந்து புதிய மீட் சாதனை(பழைய சாதனை 5 நிமிடம் 03.16 வினாடிகள்) படைத்தாா்.

குரூப் 1 சிறுவா் 200மீ. பிரஸ்ட் ஸ்ட்ரோக்கில் எம்.எஸ்.நிதீஷ் (திருநெல்வேலி), குரூப் 2 சிறுவா் 200மீ. பட்டா் பிளை நீச்சலில் அப்துல்லா ஹயாஸ் (ஏசஸ்), குரூப் 2 சிறுமியா் 200மீ. பிரஸ்ட் ஸ்ட்ரோக்கில் ஸ்ரீநிதி நடேசன்(செயின்ட் பிரிட்டோ அகாதெமி) ஆகியோரும் புதிய மீட் சாதனை படைத்தனா்.

அதிரடியாக குறையும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

பாஜக கூட்டணிக்கு நடிகா் விஜய் வருகிறாரா?: நயினாா் நாகேந்திரன் பதில்

வேலூர் கனமழை பாதிப்பு: உதவி எண்கள் அறிவிப்பு

2-வது ஒருநாள்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பேட்டிங்!

ஆவடி அருகே 3 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

SCROLL FOR NEXT