விவாகரத்து வழக்கு விசாரணையில் தனது கணவரைத் தாக்கிய முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனையின் விடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அர்ஜுனா விருது வென்றவரான முன்னாள் குத்துச்சண்டை வீராங்கனை சாவீட்டி பூரா மற்றும் கபடி வீரரான தீபக் நிவாஸ் ஹூடா இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தீபக் தன்னிடம் வரதட்சினை கேட்பதாக சாவீட்டி காவல் துறையிடம் புகாரளித்திருந்தார். மேலும், தன்னை தாக்குவதால், விவகாரத்து கோரி மனு ஒன்றும் தாக்கல் செய்திருந்தார்.
இவர் விவகாரத்துக்கான வழக்கு விசாரணை கடந்த மார்ச் 15 ஆம் தேதி ஹரியாணாவில் உள்ள ஹிசார் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் நடைபெற்றது. அப்போது இருவரது குடும்பத்தினர் முன்னிலையிலும் பூரா அவரது கணவரில் கழுத்தைப் பிடித்து சரமாரியாகத் தாக்கினார்.
இதையும் படிக்க: லட்சக்கணக்கானோர் ஏமாற்றம்! நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த சிஎஸ்கே - ஆர்சிபி டிக்கெட்டுகள்!
இந்த விடியோ காட்சிகள் காவல் நிலையத்தில் இருந்த சிசிடிவியில் பதிவான நிலையில், அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து ஹிசார் மாவட்ட காவல் நிலையப் பொறுப்பாளர் கூறுகையில், “ஹூடா பணம் மற்றும் சொகுசு கார் கேட்டு பூராவை துன்புறுத்தியுள்ளார். மேலும், இதுதொடர்பாக பிஎன்எஸ் பிரிவு 85 கீழ் ஹூடாவின் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது” என்றார்.
2014 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பைத் தொடரில் வெண்கலப்பதக்கம் வென்ற ஹூடா, 2016 ஆம் ஆண்டு தெற்காசிய போட்டியில் இந்திய அணிக்காக தங்கப்பதக்கம் வென்றார். மேலும், ஹூடா கடந்தாண்டு ஹரியாணா பேரவைத் தேர்தலில் ரோதஹ் மாவட்டம் மேஹேம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தமனின் இசையுடன் தொடங்கும் ஹைதராபாத் - லக்னெள போட்டி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.