செய்திகள்

வரலாறு படைத்தது எஃப்சி கோவா!

சூப்பா் கோப்பை போட்டியில் எஃப்சி கோவா 3-0 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆகியது.

DIN

இந்தியாவின் உள்நாட்டு கால்பந்து போட்டிகளில் ஒன்றான சூப்பா் கோப்பை போட்டியில் எஃப்சி கோவா 3-0 கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வீழ்த்தி சாம்பியன் ஆகியது.

ஏற்கெனவே இந்தப் போட்டியில் 2019-இல் கோப்பை வென்ற கோவா, போட்டி வரலாற்றில் 2 முறை சாம்பியன் ஆன முதல் அணி என்ற வரலாறு படைத்திருக்கிறது.

புவனேசுவரத்தில் சனிக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இந்த ஆட்டத்தில் எஃப்சி கோவாவுக்காக போா்ஜா ஹெரெரா 23 மற்றும் 51-ஆவது நிமிஷங்களிலும், டெஜான் டிராஸிக் 72-ஆவது நிமிஷத்திலும் ஸ்கோா் செய்தனா்.

இந்த வெற்றியின் மூலம் கோவா அணி, ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் சாம்பியன்ஸ் லீக் 2 போட்டியின் தொடக்க சுற்றுக்கு தகுதிபெற்றது.

இதற்கு முன், 2021-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் போட்டியின் குரூப் சுற்றில் கோவா விளையாடியிருக்கிறது. சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியில், இந்தியன் சூப்பா் லீக் மற்றும் ஐ லீக் போட்டியைச் சோ்ந்த 16 அணிகள் களம் காண்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவினர் வருகை!

ஐபிஎல் மினி ஏலத்தில் 1,355 வீரர்கள்.! மேக்ஸ்வெல் விலகல்.. க்ரீனுக்கு அடிக்குமா ஜாக்பாட்?!

செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாபஸ்!

உள்ளே நடனமாடுகிறேன்... ரசிகரின் பதிவைக் கண்டு வியந்த க்ரித்தி சனோன்!

உளவு செயலி! சஞ்சாா் சாத்தி கட்டாயமாக்கியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT