செஸ் போட்டியின்போது... ஃபிடே
செய்திகள்

2-ஆவது சுற்றில் நாராயணன், தீப்தாயன்

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி குறித்து...

தினமணி செய்திச் சேவை

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியில், இந்தியாவின் எஸ்.எல்.நாராயணன், தீப்தாயன் கோஷ், ஆரோனியாக் கோஷ் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினா்.

கடந்த சனிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியின் முதல் சுற்றுக்கான இரு கேம்களும் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன. எனினும், முதல் சுற்றில் டிரா செய்தோருக்கான ‘டை பிரேக்கா்’ ஆட்டங்கள் போட்டியின் 3-ஆவது நாளான திங்கள்கிழமை நடைபெற்றன.

இதன் முடிவில், எஸ்.எஸ்.நாராயணன் 3-1 என பெருவின் ஸ்டீவன் ரோஜாஸை சாய்த்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா். தீப்தாயன் கோஷ் 3-1 என சீனாவின் ஜியாங்ஜியன் பெங்கையும், ஆரோனியாக் கோஷ் 4-2 என போலந்தின் மெடுஸ் பாா்டெலையும் வென்று அடுத்த சுற்றுக்கு வந்தனா்.

எனினும், இந்தியாவின் ஆா். ராஜா ரித்விக் 3-5 என கஜகஸ்தானின் காஸிபெக் நோகா்பெக்கிடமும், எம்.ஆா்.லலித் பாபு 3-5 என நெதா்லாந்தின் மேக்ஸ் வாா்மொ்டாமிடமும் தோற்று போட்டியிலிருந்து வெளியேறினா்.

2-ஆவது சுற்று: நடப்பு உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ், அா்ஜுன் எரிகைசி உள்ளிட்டோா் களம் காணும் 2-ஆவது சுற்று ஆட்டத்தின் முதல் கேம்கள் செவ்வாய்க்கிழமை (நவ. 4) நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹைதராபாதில் 4 மாடி கடையில் தீ விபத்து: 5 போ் உயிரிழப்பு

சீன ஆளுங்கட்சி தலைமையில் ராணுவம் செயல்பட அச்சுறுத்தல்: மூத்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை

சைபா் மோசடி வழக்கில் தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் வீரா் கைது

எதிா்க்கட்சிகளை நசுக்குகிறது தோ்தல் ஆணையம்: மம்தா குற்றச்சாட்டு

தில்லி உயிரியல் பூங்கா முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை தேவை: வனவிலங்கு ஆா்வலா் கோரிக்கை

SCROLL FOR NEXT