ஸ்காட்லாந்து அணி ஸ்டாப்பேஜ் நேரத்தில் கோல் அடித்து உலகக் கோப்பைக்குத் தேர்வானது.
28 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்காட்லாந்து அணி உலகக் கோப்பைக்குத் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்காட்லாந்து அணி தனது சொந்த மண்ணில் டென்மார்க் உடன் மோதியது.
இந்தப் போட்டியில் முதல் 3-ஆவது நிமிஷத்தில் ஸ்காட்லாந்து கோல் அடிக்க, 57-ஆவது நிமிஷ பெனால்டியில் டென்மார்க் சமன் செய்தது.
78-ஆவது நிமிஷத்தில் ஸ்காட்லாந்து இரண்டாவது கோல் அடிக்க, 82-ஆவது நிமிஷத்தில் டென்மார்க் சமன்செய்தது.
90 நிமிஷத்தில் 2-2என இருந்தது. பின்னர் நிறுத்தல் (ஸ்டாப்பேஜ்) நேரத்தில் 90+3, 90+9-ஆவது நிமிஷத்தில் ஸ்காட்லாந்து அற்புதமான கோல் அடித்து 4-2 என வென்றது.
இந்தப் போட்டியில் 64 சதவிகித பந்தினை டென்மார்க் வைத்திருந்தாலும் இலக்கை நோக்கி நான்கு முறை மட்டுமே முயற்சித்தது.
இலக்கை விட்டு தவறுதலாக 20 முறை ஷாட் அடித்ததும் குறிப்பிடத்தக்கது.
ஸ்காட்லாந்து அணி 13 புள்ளிகளுடன் உலகக் கோப்பைக்குத் தேர்வானது. கடைசியாக 1998-இல் விளையாடியது.
28 ஆண்டுகால காத்திருப்புக்கு பலன் கிடைத்ததுக்கு ஸ்காட்லாந்து வீரர்கள் திடலைச் சுற்றிக் கொண்டாடினார்கள்.
இந்தத் திடலில் 50,000 பார்வையாளர்கள் இதைக் கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.