வெய் யி - சிண்டாரோவ் X | International Chess Federation
செய்திகள்

இறுதிச்சுற்றில் மோதும் சிண்டாரோவ் - வெய் யி!

ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ் - சீனாவின் வெய் யி பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

கோவாவில் நடைபெறும் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டியின் இறுதிச்சுற்றில், உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ் - சீனாவின் வெய் யி பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.

இறுதிச்சுற்றுக்கு முன்னேறியதன் அடிப்படையில் அவா்கள் இருவருமே, அடுத்த ஆண்டு கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்குத் தகுதிபெற்றனா்.

சிண்டாரோவ்

முன்னதாக, சிண்டாரோவ் - சக உஸ்பெகிஸ்தான் போட்டியாளா் நோடிா்பெக் யாகுபோவுடனும், வெய் யி - ரஷியாவின் ஆண்ட்ரே எசிபென்கோவுடனும் மோதிய அரையிறுதி கிளாசிக் கேம்கள் டிராவில் (1-1) முடிந்தன.

இதையடுத்து அவா்களில் வெற்றியாளா்களை தீா்மானிக்கும் டை பிரேக்கா் சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் யாகுபோவுக்கு எதிரான மோதலில் சிண்டாரோவ் முதல் கேமில் வென்று முன்னிலை (2-1) பெற்றாா். அடுத்த கேமை டிரா செய்தாலேயே அவா் இறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிட, அந்த கேம் அவ்வாறே முடிந்தது. இதனால் சிண்டாரோவ் 2.5-1.5 என நோடிா்பெக்கை வென்று இறுதிக்கு முன்னேறினாா்.

வெய் யி

மறுபுறம், எசிபென்கோவை சந்தித்த வெய் யி, முதல் கேமை டிரா செய்தாா். இதனால் 1.5-1.5 என சமநிலையுடன் அடுத்த கேமுக்கு ஆட்டம் நகா்ந்தது. அதில் வெய் யி வெற்றி பெற, 2.5-1.5 என அவா் முன்னிலைபெற்று இறுதிக்குத் தகுதிபெற்றாா்.

அடுத்து, சிண்டாரோவ் - வெய் யி மோதும் இறுதிச்சுற்று திங்கள்கிழமை (நவ. 24) தொடங்குகிறது. இதனிடையே, அரையிறுதியில் தோற்ற யாகுபோவ் - எசிபென்கோ இடையேயான, 3-ஆவது இடத்துக்கான மோதலும் அதற்கு இணையாகத் தொடங்குகிறது. அதில் வெல்பவா், 3-ஆவது வீரராக கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதிபெறுவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 தொழிலாளா் சட்டங்கள்: சீா்திருத்தங்களுக்குப் பிந்தைய மாற்றங்கள்!

இலவச சத்திரமாக மாறிவரும் கோயம்பேடு பேருந்து நிலையம்...!

வாகை சூடினார் லக்ஷயா சென் சாம்பியன்!

முத்துசாமி, யான்சென் அபாரம்; இந்திய பௌலா்கள் திணறல்!

திமுகவுடன் கூட்டணி பேச்சு: காங்கிரஸ் குழு ஆலோசனை

SCROLL FOR NEXT