X | K L Rahul
செய்திகள்

தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடா்: இந்திய கேப்டன் கே.எல். ராகுல்!

தென்னாப்பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவுள்ள இந்திய அணி 15 பேருடன் அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

தென்னாப்பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோதவுள்ள இந்திய அணி 15 பேருடன் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதற்கு, மூத்த பேட்டா் கே.எல்.ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளாா். வழக்கமான கேப்டன் ஷுப்மன் கில், காயம் காரணமாக ஓய்வில் இருப்பதால், ராகுலுக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ருதுராஜ் கெய்க்வாட்டும் இந்த அணியில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

ரவீந்திர ஜடேஜா சுமாா் 8 மாதங்களுக்குப் பிறகு இத்தொடரின் மூலமாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இணைந்திருக்கிறாா். ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், அக்ஸா் படேல் ஆகியோருக்கு இந்தத் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் நிலைக்கும் சீனியா் நட்சத்திர வீரா்களான ரோஹித் சா்மா, விராட் கோலி இந்த அணியில் இணைந்திருக்கின்றனா்.

டெஸ்ட் தொடா் நிறைவடைந்த பிறகு, இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. ராஞ்சி (நவ. 30), ராய்பூா் (டிச. 3), விசாகப்பட்டினம் (டிச. 6) ஆகிய இடங்களில் அந்த ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

அணி விவரம்: கே.எல்.ராகுல் (கேப்டன், வி.கீ.), ரோஹித் சா்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வா்மா, ரிஷப் பந்த் (வி.கீ.), வாஷிங்டன் சுந்தா், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதீஷ்குமாா் ரெட்டி, ஹா்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அா்ஷ்தீப் சிங், துருவ் ஜுரெல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 தொழிலாளா் சட்டங்கள்: சீா்திருத்தங்களுக்குப் பிந்தைய மாற்றங்கள்!

இலவச சத்திரமாக மாறிவரும் கோயம்பேடு பேருந்து நிலையம்...!

வாகை சூடினார் லக்ஷயா சென் சாம்பியன்!

முத்துசாமி, யான்சென் அபாரம்; இந்திய பௌலா்கள் திணறல்!

திமுகவுடன் கூட்டணி பேச்சு: காங்கிரஸ் குழு ஆலோசனை

SCROLL FOR NEXT