மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில், இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன. இதில், இந்தூரில் இன்று (அக். 22) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இந்த நிலையில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 244 ரன்களை குவித்தது.
இதையடுத்து, களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 245 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதிகப்படியாக, ஆஸ்திரேலியா வீராங்கனைகள் ஆஷ்லீ கார்ட்னர் 73 பந்துகளில் 104 ரன்களையும், அன்னாபெல் சதர்லேண்ட் 112 பந்துகளில் 98 ரன்களையும் குவித்தனர்.
இதனால், 40.3 ஓவர்களில் வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆஸ்திரேலியா அணி 248 ரன்கள் எடுத்து இலக்கை அடைந்தது. இந்த வெற்றியின் மூலம், இதுவரை தோல்வியே சந்திக்காத ஆஸ்திரேலியா பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இத்துடன், உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கியதில் இருந்து முதல்முறை தோல்வியடைந்துள்ள இங்கிலாந்து அணி பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மகளிர் உலகக் கோப்பை: ஆஸி.க்கு 245 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.