ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது காயமடைந்து, சிகிச்சை பெற்றுவந்த இந்திய துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் நலமாக இருப்பதாக சூர்ய குமார் யாதவ் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த இந்தியா, கடந்த சனிக்கிழமை சிட்னியில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸின்போது அலெக்ஸ் கேரி அளித்த கேட்சை பின்பக்கமாக திருப்பிச் சென்று ஓடி அசத்தலாக பிடித்தாா் ஷ்ரேயஸ் ஐயா்.
இருப்பினும், அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து புரண்ட அவருக்கு, இடது நெஞ்செலும்புக் கூடு கீழ் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் சுருண்ட அவா், உடனடியாக களத்திலிருந்து வெளியேறினாா். தொடர்ந்து, சிகிச்சைக்காக சிட்னியில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், ஷ்ரேயஸ் ஐயர் தற்போது நலமுடன் இருப்பதாகவும், மொபைல் போனில் மற்றவர்களுடன் பேசுவதாகவும் மெசேஜ்-களுக்கு பதிலளிப்பதாகவும் சூர்ய குமார் யாதவ் உறுதிப்படுத்தினார்.
இதனிடையே, ஷ்ரேயஸ் ஐயரின் குடும்பத்தினரையும் சிட்னிக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: உலகக் கோப்பை: பிரதிகா ராவலுக்குப் பதிலாக மாற்று வீராங்கனை அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.