கோப்புப் படம்  ENS
செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் இடை நீக்கம்!

பாலியல் தொல்லை அளித்த துப்பாக்கி சுடும் பயிற்சியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

18 வயதுக்குள்பட்ட வீராங்கனையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பயிற்சியாளர் அன்குஷ் பரத்வாஜ் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஃபரிதாபாதில் அன்குஷ் பரத்வாஜ் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளதாக தேசிய துப்பாக்கி சுடும் ஆணையம் (என்ஆர்ஏஐ) தெரிவித்துள்ளது.

இது குறித்து என்ஆர்ஏஐ செயலாளர் ராஜீவ் பாட்டியா கூறியதாவது:

என்ஆர்ஏஐ அவரை இடைநீக்கம் செய்துள்ளது. அவருக்கான நோட்டீஸும் அனுப்பப்படும். அவர் தன்னைக் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும். விசாரணை முடியும்வரை அவர் எந்தவொரு பயிற்சியாளர் பணிகளிலும் ஈடுபட முடியாது.

ஹரியாணாவில் சுராஜ்குந்த் எனுமிடத்தில் இந்தப் பாலியல் தொல்லை நடந்துள்ளது என்றார்.

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 2024-க்குப் பிறகு 37 வலுவான துப்பாக்கி சுடும் பயிற்சியாளர்கள் அணியில் பரத்வாஜும் சேர்க்கப்பட்டார்.

இந்தப் பாலியல் தொல்லை எப்போது நடந்தது என்பது குறித்து பாட்டியா தெரிவிக்கவில்லை. ஆனால், முதல் தகவல் அறிக்கையின்படி, கடந்த மாதம் சுராஜ்குந்தில் கர்னி சிங் ரஞ்சே பயிற்சிக்குப் பிறகு தான் இலக்காகப் பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் முதல் பரத்வாஜுடன் அந்த வீராங்கனை பயிற்சி எடுத்து வருகிறார்.

தொடர் தொல்லையினால் மனமுடைந்த வீராங்கனை தனது தாயாரிடம் கடந்த ஜன.1ஆம் தேதி இது குறித்து பேசியுள்ளார்.

முன்னாள் துப்பாக்கி சுடும் வீரரான அன்குஷ் பரத்வாஜ் கடந்த 2010-இல் ஊக்க மருந்து தடையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

A prominent member of India's shooting coaching staff, Ankush Bhardwaj, has been accused of sexual harassment by a minor shooter, prompting the national federation to suspend him.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியாயவிலைக் கடை திறப்பு

படித்தால்... பிடிக்கும்! புறநானூறு

விஐடி சென்னை வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

10.1.1976: பிரதமரின் குற்றச்சாட்டு பற்றி கருணாநிதி - தி.மு.க. பத்திரிகை மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்கிறார்

பதிப்பகங்கள் : அல்லயன்ஸ்

SCROLL FOR NEXT