கோலியுடன் பாண்டியா 
டி20 உலகக் கோப்பை

ஹார்திக் பாண்டியா பந்துவீசினார்!

இந்திய அணி ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, வலைப்பயிற்சியில் பந்துவீசத் தொடங்கியுள்ளார்.

DIN

இந்திய அணி ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, வலைப்பயிற்சியில் பந்துவீசத் தொடங்கியுள்ளார்.

ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணியில் விளையாடிய பாண்டியா, காயம் காரணமாக ஒரு ஓவர் கூட வீசவில்லை. 2019 அக்டோபரில் அறுவைச் சிகிச்சை மேற்கொண்டார் பாண்டியா. அதன்பிறகு விளையாடிய 41 சர்வதேச ஆட்டங்களில் 46 ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார். கடைசியாக ஜூலை 25 அன்று இலங்கைக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இரு ஓவர்களை வீசினார். இலங்கைச் சுற்றுப்பயணத்தில் விளையாடிய 3 ஒருநாள், ஒரு டி20 ஆட்டங்களில் மொத்தமாகவே 16 ஓவர்களை மட்டுமே வீசினார். 

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் பாண்டியா பந்துவீசாததால் விமர்சனங்களுக்கு ஆளானார். பேட்டராக மட்டும் அணியில் விளையாடுவதற்குப் பலரும் மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்தார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் பாகிஸ்தான் இன்னிங்ஸின்போது அவர் ஃபீல்டிங் செய்யவில்லை. இதனால் பாண்டியாவின் உடற்தகுதி குறித்தும் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

இந்நிலையில் புதன்கிழமையன்று வலைப்பயிற்சி மேற்கொண்டபோது 20 நிமிடங்கள் பந்துவீசியுள்ளார் பாண்டியா. வலைப்பயிற்சியில் புவனேஸ்வர் குமார், ஷர்துல் ஆகியோருக்கு பந்துவீசிப் பயிற்சி எடுத்தார். இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் பாண்டியா ஓரிரு ஓவர்களை வீசுவார் எனத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பருவமழை: விவசாயிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

காந்தி ஜெயந்தி நாளில் விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

கரூர் சம்பவம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி

பூவாசம்... அஞ்சனா

SCROLL FOR NEXT