விராட் கோலி, பும்ரா. 
டி20 உலகக் கோப்பை

உலகின் 8ஆவது அதிசயம் பும்ரா! விராட் கோலி புகழாரம்!

வான்கடே மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவில் பும்ராவை விராட் புகழ்ந்து பேசினார்.

DIN

பாா்படோஸிலிருந்து புதன்கிழமை புறப்பட்ட இந்திய அணியினா், 16 மணி நேர இடைநில்லா பயணத்துக்குப் பிறகு வியாழக்கிழமை காலை 6 மணியளவில் தில்லி விமான நிலையம் வந்தடைந்தனா். பின்னர் மும்பை வந்தனர்.

ஊா்வலத்தின் நிறைவாக இரவில் வான்கடே மைதானத்தை அடைந்த இந்திய அணியினருக்கு, அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.125 கோடி பரிசுத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. மைதானத்தில் உற்சாகப் பாடல் ஒலிக்க, இந்திய வீரா்களும் நடனமாடிக் கொண்டாடினா்.

இந்த உலகக் கோப்பைதொடரில் 15 விக்கெட்டுகள் எடுத்தார். தொடர் நாயகன் விருதினையும் அசத்தினார்.

இந்தப் பாராட்டு விழாவில் தொகுப்பாளர் விராட் கோலியிடம், “பும்ராதான் உலகின் 8ஆவது அதிசயம் என்ற விண்ணப்பத்தில் கையெழுத்து போடுவீர்களா?” எனக் கேட்டார். சிறிதும் யோசிக்காகாமல் கோலி, “ஆமாம்” என்றார். மேலும் பேசுகையில் விராட் கூறியதாவது:

பும்ரா ஒரு தலைமுறையின் கிரிக்கெட்டர். உங்களைப் போலவே நாங்களும் போட்டி கைநழுவி சென்றுவிட்டதென நினைத்தோம். ஆனால் கடைசி 5 ஓவரில் நடந்தது மிகவும் சிறப்பான நிகழ்வு. இந்த உலகக் கோப்பையில் எப்போதெல்லாம் நாம் தோல்வியிறுகிறோம் என்ற இக்கட்டான சூழ்நிலை வரும்போதெல்லாம் நம்மை மீண்டும் மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்த பும்ராவுக்கு பலத்தை கைதட்டுகளை தர கேட்டுக்கொள்கிறேன். கடைசி 5 ஓவரில் அவர் வீசும் 2 ஓவர்கள் அற்புதமானது. அவருக்கு நிச்சயமாக நாம் பலத்த கரகோஷங்களை தரவேண்டும் என்றார்.

பும்ரா நெகிழ்ச்சியில் உறைந்தார். ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT