பாட் கம்மின்ஸ் (கோப்புப்படம்) 
டி20 உலகக் கோப்பை

டி20 உலகக் கோப்பை தொடரை வெல்லும் நம்பிக்கை உள்ளது: பாட் கம்மின்ஸ்

வெற்றிகரமான ஐபிஎல் தொடருக்குப் பிறகு உலகக் கோப்பை டி20 தொடரில் நம்பிக்கையுடன் களமிறங்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

DIN

வெற்றிகரமான ஐபிஎல் தொடருக்குப் பிறகு உலகக் கோப்பை டி20 தொடரில் நம்பிக்கையுடன் களமிறங்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாதை அந்த அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் சிறப்பாக வழிநடத்தினார். இறுதிப்போட்டி வரை முன்னேறிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத், இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. ஐபிஎல் தொடருக்குப் பிறகு தற்போது டி20 உலகக் கோப்பை டி20 தொடரில் விளையாடுவதற்காக பாட் கம்மின்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணியினர் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், வெற்றிகரமான ஐபிஎல் தொடருக்குப் பிறகு உலகக் கோப்பை டி20 தொடரில் நம்பிக்கையுடன் களமிறங்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடியுள்ளோம். டி20 போட்டிகளில் வேகப் பந்து, யார்க்கர் பந்து மற்றும் மெதுவான பந்து என வித்தியாசமாக வேண்டும். அதன்பின், டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும். டெஸ்ட் போட்டிகளைக் காட்டிலும் டி20 போட்டிகளில் பந்துவீசும் விதம் வித்தியாசமானது.

டி20 போட்டிகளில் அதிகம் விளையாடியது டி20 உலகக் கோப்பைக்கு உதவியாக இருக்கும். முதல் போட்டியில் எங்களது யுக்தியை முழுவதுமாக பயன்படுத்த முடியாமல் போனால், அடுத்தடுத்த போட்டிகளில் எங்களது யுக்தியை பயன்படுத்தி வெற்றி பெறுவோம். அதிக தன்னம்பிக்கையோடு டி20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ளது சிறப்பானது. டி20 உலகக் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT