பாகிஸ்தான் வீரர்கள் (கோப்புப்படம்) 
டி20 உலகக் கோப்பை

இந்தியாவை வெல்ல பாகிஸ்தான் என்ன செய்ய வேண்டும்? ஆல்ரவுண்டர் பதில்!

இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற பாகிஸ்தான் என்ன செய்ய வேண்டுமென அந்த அணியின் ஆல்ரவுண்டர் பேசியுள்ளார்.

DIN

இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெற பாகிஸ்தான் என்ன செய்ய வேண்டுமென அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஃபவாத் ஆலம் பேசியுள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் நாளை (ஜூன் 9) நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்களிடம் அதிக உற்சாகம் இருக்கும். டி20 உலகக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணியும், அமெரிக்காவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியும் மோதுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான நாளைய போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டுமென்றால், விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு எதிராக அவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமென அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஃபவாத் ஆலம் பேசியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். ஏனென்றால், அவர்கள் இருவரும் அனுபவம் வாய்ந்த வீரர்கள். பாகிஸ்தானிடமிருந்து எளிதாக இந்தியாவுக்கு சாதகமாக ஆட்டத்தை அவர்களால் எடுத்துச் செல்ல முடியும். இந்திய அணி சமபலத்துடன் வலிமையாக இருப்பதால் அவர்களை வீழ்த்துவது கடினம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT