ஷகித் அஃப்ரிடி படம் | ஐசிசி
டி20 உலகக் கோப்பை

பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்: ஷகித் அஃப்ரிடி

பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

DIN

பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கம் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. டி20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் அமெரிக்காவிடம் தோல்வியைத் தழுவியது. அதன்பின், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கனடாவுக்கு எதிரான வாழ்வா? சாவா? போட்டியில் பாகிஸ்தான் அணி இன்று விளையாடவுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கேரி கிறிஸ்டன் மற்றும் பாபர் அசாம் இருவரும் பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்களை மேற்கொள்வதற்கான நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறேன். உஸ்மான் கானுக்குப் பதிலாக அணியில் சல்மான் அலி அஹா இருக்க வேண்டுமென நினைக்கிறேன். அதேபோல ஷதாப் கானுக்குப் பதிலாக அப்ரார் அகமது அணியில் சேர்க்கப்பட வேண்டும்.

இதைத் தவிர, முகமது ரிஸ்வானுடன் ஃபகர் ஸமான் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டுமென நினைக்கிறேன். பாபர் அசாம் 3-வது வீரராக களமிறங்க வேண்டும். பாகிஸ்தான் அணியின் மீது பல கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால், பாகிஸ்தான் இன்னும் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறிவிடவில்லை என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

கணினி தரவு பதிவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT