முகப்பு
டி20 உலகக் கோப்பை

நேபாளத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய வங்கதேசம்!

37-வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் நேபாளம் அணிகள் மோதின.

Updated On : 17 ஜூன், 2024 at 4:36 AM
படம் | ஐசிசி
பகிர்:

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ்ஸில் நடைபெற்றுவரும் டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு 7 அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில், 8-வது அணியாக எந்த அணி தகுதி பெறப்போகிறது என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் இன்று (ஜூன் 17) நடைபெற்ற 37-வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் மற்றும் நேபாளம் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ்ஸை வென்ற நேபாளம் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்து முதல் பந்தை எதிர்கொண்ட வங்கதேசத்தின் தன்ஷித் ஹாசன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

வங்கதேச அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷகிப்-அல் ஹசன் 17 ரன்களும் மஹ்மத்துல்லா, ரிஷத் ஹொசைன் தலா 13 ரன்களும் எடுத்தனர்.

நேபாள அணி தரப்பில் சோம்பால் கமி, திபேந்திர சிங், கேப்டன் ரோஹித் பவுடல், சந்தீப் லாமிச்சானே ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அதைத் தொடர்ந்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நேபாளம் அணி தரப்பில் குஷால் மல்லா, திபேந்திர சிங் ஆகியோர் சிறப்பாக விளையாடி 27 ரன்கள் மற்றும் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ஆசிப் ஷேக் 17 ரன்களும், கேப்டன் ரோஹித் பவுடல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிறப்பாக பந்து வீசிய ஷகிப் அல் ஹசன் ரன் ஏதுமின்றி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை சிறப்பாக முடித்து வைத்தார்.

19.2 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

வங்கதேசத்தின் தன்சிம் ஹசன் சாகிப் 4 விக்கெட்டுகளும், முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

வங்கதேசம் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் நேபாளத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →