பில் சால்ட் படம் | AP
டி20 உலகக் கோப்பை

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வெற்றி நம்பிக்கையளிக்கிறது: பில் சால்ட்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வெற்றி நம்பிக்கையளித்துள்ளதாக இங்கிலாந்து வீரர் பில் சால்ட் தெரிவித்துள்ளார்.

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான வெற்றி நம்பிக்கையளித்துள்ளதாக இங்கிலாந்து வீரர் பில் சால்ட் தெரிவித்துள்ளார்.

சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான பில் சால்ட் அதிரடியாக விளையாடி 47 பந்துகளில் 87 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக சரியான நேரத்தில் கிடைத்த வெற்றி நம்பிக்கையளித்துள்ளதாக இங்கிலாந்து வீரர் பில் சால்ட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடர் இங்கிலாந்து அணிக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருந்தது. லீக் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தோம். மழையின் காரணமாக ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி கைவிடப்பட்டது. சூப்பர் 8 சுற்றில் விளையாடும் வரை, நாங்கள் முழுமையாக கிரிக்கெட் விளையாடியது போன்று தெரியவில்லை. சரியான நேரத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கிடைத்துள்ள வெற்றி எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. அந்த நம்பிக்கையை அடுத்தடுத்தப் போட்டிகளுக்கும் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT