இன்ஸமாம் உல் ஹக், ரோஹித் சர்மா 
டி20 உலகக் கோப்பை

“மூளையைப் பயன்படுத்துங்கள்” : இன்ஸமாமின் குற்றச்சாட்டுக்கு ரோஹித் பதிலடி!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்ஸமாமின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.

DIN

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இன்ஸமாமின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ளார்.

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட்டரும் முன்னாள் பாகிஸ்தான் தேர்வுக்குழுத் தலைவருமான இன்ஸமாம் உல் ஹக் இந்திய அணி மீது பந்தினை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டியது பேசுபொருளாகியுள்ளது.

இது குறித்து இந்திய அணியின் கேப்டன் (அணித் தலைவர்) ரோஹித் சர்மாவிடம் கேள்வி கேட்டபோது, “நான் என்ன சொல்ல வேண்டுமென நினைக்கிறீர்கள் சகோதரரே. (சிரிக்கிறார்). இங்கு ஆடுகளம் மிகவும் வறண்டிருக்கிறது; வெயிலில் விளையாடுகிறோம். அனைத்து அணிக்குமே ஸ்விங் ஆகிறது. சில நேரங்களில் மூளையைப் பயன்படுத்த வேண்டும். இங்கு ஆடுகளத்தின் தன்மையைப் புரிந்துக்கொள்ள வேண்டும். இது இங்கிலாந்தோ ஆஸ்திரேலியாவோ கிடையாது. அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்” என்றார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவை 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு தேர்வானது. இன்று இங்கிலாந்துடன் அரையிறுதியில் மோதுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தம்பதியை தாக்கியதாக 4 போ் மீது வழக்கு

கூலித் தொழிலாளிக்கு ரூ. 1.60 கோடி வரிஏய்ப்பு செய்ததாக ஜிஎஸ்டி நோட்டீஸ்

கல்லறைத் திருநாள்: கிறிஸ்தவா்கள் முன்னோா்களுக்கு அஞ்சலி

ரூ.19.45 லட்சத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திறப்பு

ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசி ஆஸ்தானம்

SCROLL FOR NEXT