விராட் கோலி  படம் | AP
டி20 உலகக் கோப்பை

இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்லும்; விராட் கோலியின் பயிற்சியாளர் நம்பிக்கை!

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்லும் என விராட் கோலியின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்லும் என விராட் கோலியின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று (ஜூன் 29) மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி பார்படாஸில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்லும் என விராட் கோலியின் குழந்தைப் பருவ பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதிலும் குறிப்பாக, ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது சிறப்பானது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. பல ஆண்டுகளாக நாம் ஐசிசி கோப்பையை வெல்லவில்லை. இன்று நமது ஐசிசி கோப்பையை வெல்லும் கனவு நிறைவேறும்.

விராட் கோலியின் ஃபார்ம் ஒரு பிரச்னையே இல்லை. அவர் நன்றாக விளையாடுகிறார். அதனால், அவர் அதிக ரன்கள் சேர்க்கவில்லை என்பது பெரிய கவலையளிக்கக் கூடிய விஷயமில்லை. இந்திய அணி நன்றாக செயல்படுகிறது. அதுதான் முக்கியம். இந்திய அணி மிகவும் வலுவாக உள்ளது. நமது சுழற்பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்படுகிறார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 பேர் பலி !

காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

SCROLL FOR NEXT