படம் | ஐசிசி
டி20 உலகக் கோப்பை

இரண்டு இறுதிப்போட்டி தோல்விகள் இந்தியாவை பாதிக்காது: ராகுல் டிராவிட்

ஐசிசி தொடரின் இரண்டு இறுதிப்போட்டி தோல்விகள் இந்தியாவின் டி20 உலகக் கோப்பையை வெல்லும் நோக்கத்தை பாதிக்காது என ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

DIN

ஐசிசி தொடரின் இரண்டு இறுதிப்போட்டி தோல்விகள், இந்தியாவின் டி20 உலகக் கோப்பையை வெல்லும் நோக்கத்தை பாதிக்காது என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. தற்போது இந்திய அணி ஐசிசி நடத்தும் தொடரான டி20 உலகக் கோப்பையில் மீண்டுமொருமுறை இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.

பார்படாஸில் இன்று (ஜூன் 29) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன.

இந்த நிலையில், ஐசிசி தொடரின் இரண்டு இறுதிப்போட்டி தோல்விகள், இந்தியாவின் டி20 உலகக் கோப்பையை வெல்லும் நோக்கத்தை பாதிக்காது என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி வீரர்கள் ஒவ்வொரு நாளையும் புதிய நாளாக பார்க்கின்றனர். அவர்கள் கடந்த கால போட்டிகளில் நிகழ்ந்தவற்றவை மனதில் சுமந்து செல்வதாக நான் நினைக்கவில்லை. கடந்த கால நினைவுகளிலிருந்து மீண்டு வீரர்கள் அடுத்த இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்து செல்கிறார்கள். இரண்டு சிறந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

இந்த தொடர் முழுவதும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் சிறப்பாக செயல்பட்டதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன். இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு இரண்டு அணிகளும் மிகவும் தகுதியானவர்களே. இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய அணி சமபலத்துடன் இருக்கிறது என்றார்.

இன்று நடைபெறும் இறுதிப்போட்டியுடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் முதல்முறை... வரலாறு படைத்த லோகா!

வாழ்க்கை - வேலை சமநிலைப்படுத்த திணறுகிறீர்களா? இதோ டின்டிம் பென்குயின் பற்றிய கதை!

பாலியல் வன்கொடுமை: காவலர்களுக்கு 2 மடங்கு தண்டனை தர வேண்டும் - ராமதாஸ்

கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன்! - முதல்வர் ஸ்டாலின்

வைல்டு ஃபயர்... ஜனனி!

SCROLL FOR NEXT