முகப்பு
தமிழ்நாடு

அதிகாரிகளை மக்கள் நேரில் சந்திக்க முடியாது: நிர்வாகச் சீர்திருத்த குழு பரிந்துரை ஏற்பு

சென்னை, பிப். 23: அரசு அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள், அலுவலர்களை மக்கள் இனி நேரில் சந்திக்க முடியாது. பொது மக்களின் குறைகளைத் தெரிவிக்க மக்கள் தொடர்பு அதிகாரி போன்ற அதிகாரியை ஒவ்வொரு அலுவலகத்திலும் நி

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:52 PM
பகிர்:

சென்னை, பிப். 23: அரசு அலுவலகங்களில் உள்ள அதிகாரிகள், அலுவலர்களை மக்கள் இனி நேரில் சந்திக்க முடியாது.

பொது மக்களின் குறைகளைத் தெரிவிக்க மக்கள் தொடர்பு அதிகாரி போன்ற அதிகாரியை ஒவ்வொரு அலுவலகத்திலும் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அரசு நிர்வாகத்தை சீரமைப்பதற்காக, நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழு தனது முதல் அறிக்கையை கடந்த 2008}ம் ஆண்டு ஏப்ரல் 25}ம் தேதி சமர்ப்பித்தது.

அறிக்கையில் உள்ள அம்சங்களை ஆராய்ந்த பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, அவற்றை செயல்படுத்துவதற்கான உத்தரவுகளை இப்போது பிறப்பித்துள்ளது. அதன் விவரம்:

""அரசு அலுவலகங்கள், தலைமைச் செயலகத்தில் கோப்புகள் உரிய காலத்தில் தீர்க்கப்பட வேண்டும். தாமதமானால் அதை கையாளும் அரசு ஊழியர் வேறு ஏதோ ஒன்றை (லஞ்சம் போன்றவை) எதிர்பார்ப்பதாக கருத வேண்டியுள்ளது. அப்படி இருந்தால் அவர் மீது துறை மீதான நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிதாக பொறுப்பேற்பதற்கு முன்பு, அரசு ஊழியர்களின் பணிக்கு ஏற்ப அவர்களுக்கு உரிய பயிற்சிகள் அளிக்கப்படும்.

புத்தாக்கப் பயிற்சி... அரசு அதி கா ரி கள் மற்றும் ஊழியர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும். ஒரு வார காலம் நடைபெறும் இந்தப் பயிற்சியில் நவீன அறிவியல் தொழில்நுட்பக் கருவிகளை கையாள்வது, நிர்வாக மேலாண்மை உள்ளிட்டவை குறித்து கற்றுத் தரப்படும்.

அரசு ஊழியர்களின் பணிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படும்.

அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணிபுரியும் ஊழியர்களுக்கு பாராட்டுப் பத்திரத்துடன் விருது அளிக்கப்படும். இதற்காக, அரசுத் துறையின் தலைவர்களைக் கொண்ட குழு அமைக்கப்படும்.

ஆய்வுக் கூட்டங்கள் குறைப்பு... அர சுத் துறை களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்கான கூட்டங்கள் அடிக்கடி நடத்தப்படும்.

ஆனால், இந்தக் கூட்டங்களைக் குறைக்க நிர்வாகச் சீர்திருத்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. அது, ஏற்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அரசுத் துறையில் உள்ள கூட்டங்கள் குறைக்கப்படும்.

அரசுப் பணியாளர் தொடர்பாக இப்போதுள்ள விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்படும். இதன்மூலம், 70 முதல் 90 சதவீதம் வரையிலான தாமதம் தவிர்க்கப்படும்.

ஊழியர்கள் எத்தனை பேர்? பதவி உயர்வு அளிப் பதற்கான பட்டியலை ஒவ்வொரு அரசுத் துறையும் உரிய காலத்தில் தயார் செய்ய வேண்டும். இதேபோன்று, பணி மூப்புக்கான பட்டியலையும் தயாரித்து வெளியிட வேண்டும்.

அரசுத் துறைகளில் உள்ள ஊழியர்கள் எத்தனை பேர் என்பது மறு மதிப்பீடு செய்யப்படும். இதன்மூலம், அரசு அலுவலகங்களில் குறைவாக அல்லது மிகையாக உள்ள ஊழியர்களின் விவரங்கள் தெரியவரும்.

அரசு ஊழியர்களைப் பார்க்க... பொது மக் கள் தங் க ளின் குறைகள், கோரிக்கைகளுக்காக அரசு ஊழியர்கள், அதிகாரிகளை நேரில் சந்திக்கின்றனர். இதனால், பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகிறது.

இதையடுத்து, ஒவ்வொரு அலுவலகத்திலும் மக்கள் தொடர்பு அதிகாரியைப் போன்று ஒரு அலுவலரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளை அவர்கள் அலுவலக நேரங்களில் வெளியில் தெரியும்படி, அணிந்து கொள்ள வேண்டும்.

சொத்துப் பட்டியல்... ஐந்து ஆண் டு களுக்கு ஒரு முறை அரசு ஊழியர்கள் தங்களது சொத்துப் பட்டியலை வெளியிட வேண்டும் என்று விதி உள்ளது. இது, கடுமையாக அமல்படுத்தப்படும்.

தட்டச்சர் பணியிடங்கள் காலி?

அரசு அலுவலகங்களில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியிடங்களை காலி செய்யும் முடிவுக்கு அரசு வந்துள்ளதாகத் தெரிகிறது.

நிர்வாகச் சீர்திருத்தக் குழு தனது பரிந்துரையில், ""தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கு கம்ப்யூட்டர் தொடர்பான சான்றிதழ் படிப்பு கட்டாயம்' எனக் கூறியுள்ளது.

தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியிடங்களை காலி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆதலால் நிர்வாக சீர்திருத்தக் குழுவின் பரிந்துரையை ஏற்க, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மறுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.