முகப்பு
தமிழ்நாடு

புராதனக் கோயில் புனரமைக்கப்படுமா?

செஞ்சி, செப். 23: செஞ்சியில் இருந்து தென்மேற்கே 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தளவானூர் கிராமத்தில் 600 ஆண்டுகால பழம்பெரும் சிவன் ஆலயம் சிதிலம் அடைந்து வருகிறது.  ÷இக்கோயிலை அரசு புனரமைக்க வேண்டும் என

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:35 PM
பகிர்:

செஞ்சி, செப். 23: செஞ்சியில் இருந்து தென்மேற்கே 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தளவானூர் கிராமத்தில் 600 ஆண்டுகால பழம்பெரும் சிவன் ஆலயம் சிதிலம் அடைந்து வருகிறது.

 ÷இக்கோயிலை அரசு புனரமைக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 ÷செஞ்சியைச் சுற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில்கள் பல சிதைந்து சீரழிந்து போயின. சிலவற்றை காப்பாற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

 ÷இதே போல் செஞ்சி வட்டம், தளவானூர் கிராமத்தில் பராமரிப்பு இல்லாமல் போன சிவன் கோயில் மீது மரம், செடி, கொடி முளைத்து கோயிலை மறைத்து வானுயரம் வளர்ந்துள்ளது.

 ÷செடி, கொடிகளை அகற்றி கோயிலை காப்பாற்ற யாரும் முன் வரவில்லை. ஒரு வரலாற்றுச் சின்னம் இங்கே அழிந்துக் கொண்டிருக்கிறது.

 ÷நம் முன்னோர் போற்றி வணங்கிய கோயில் இங்கே இடிந்து விழும் நிலையில் உள்ளது. சிவன் ஆலயத்தின் வரலாறு தெரியவில்லை. கோயிலின் சிற்ப வேலைப்பாடுகளை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது.

 ÷பிரதோஷ தினத்தில் மட்டும் பூஜைகள் நடைபெறுகிறதாம். பைரவர், தட்சிணாமூர்த்தி சிலைகள் உள்ளன. மேலும் இக் கோயிலில் உள்ள கல்வெட்டுகளை ஆய்வு செய்தால் இதன் வரலாறு தெரியும்.

 ÷இதே தளவானூரில் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் ஏற்படுத்திய குடவறை சிவன் கோயிலும் உள்ளது. இக் கோயில் தொல்லியல் ஆய்வுத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

 ÷தளவானூர் சிவன் ஆலயத்தை புதுப்பித்து பொதுமக்கள் வழிபாடு செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும். வரலாற்றுப் பொக்கிஷத்தைப் போற்றி பாதுகாக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →