14 அகதிகள் உண்ணாவிரதம் வாபஸ்
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் மேற்கொண்ட 23 அகதிகளில் 14 பேர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் மேற்கொண்ட 23 அகதிகளில் 14 பேர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதிகள் 23 பேர், தங்களைத் திறந்தவெளி முகாமுக்கு மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இதனால் மயக்கமடைந்த 20 பேர் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், டி.எஸ்.பி. மூவேந்தன், வட்டாட்சியர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் அகதிகளிடம் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பிப்ரவரி 20-க்குள் 10 பேரை விடுவிப்பதாகவும், தொடர்ந்து படிப்படியாக அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 11 பேர், உண்ணாவிரதம் மேற்கொண்ட 3 பேர் என மொத்தம் 14 பேர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்.