முகப்பு
தமிழ்நாடு

தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16-ஆம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து சுவாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:16 PM
பகிர்:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16-ஆம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து சுவாமி தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

சபரிமலைக்கு நவம்பர் 16-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை தரிசனம் செய்ய விரும்புவோர் ஜ்ஜ்ஜ்.ள்ஹக்ஷஹழ்ண்ம்ஹப்ஹவ்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பித்து முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில் சுவாமி தரிசனத்துக்கு பக்தர்களின் வசதிக்காக 2011-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட "அட்வான்ஸ் கியூ பிளேஸ்மெண்ட் கூப்பன் திட்டம்' இந்தாண்டு "விர்ச்சுவல் கியூ கூப்பன்' (யண்ழ்ற்ன்ஹப் ண இர்ன்ல்ர்ய்) என்ற பெயரில் தொடர்கிறது.

Advertisement

இந்தாண்டு சபரிமலையில் மண்டல பூஜை, நவம்பர் 15-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 26-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நாளிலிருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படும். இதையொட்டி கார்த்திகை மாதம் முதல் நாள் (நவ.16) முதல் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கும். ஆண்டுக்கு ஆண்டு சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் சுவாமி தரிசனத்துக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதை தவிர்ப்பதற்காக 2011-ஆம் ஆண்டு கேரள மாநில காவல் துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டதே "அட்வான்ஸ் கியூ பிளேஸ்மென்ட் கூப்பன்' அல்லது "வெர்ச்சுவல் கியூ கூப்பன் திட்டம்'.

எப்படி பயன்படுத்துவது?: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சுவாமி தரிசனத்துக்காக செல்லும் பக்தர்கள் ஜ்ஜ்ஜ்.ள்ஹக்ஷஹழ்ண்ம்ஹப்ஹவ்.ஸ்ரீர்ம் என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும்.

இந்த இணையதளத்தில் பக்தர்கள் தங்களுடைய பெயர் மற்றும் முகவரியுடன் புகைப்படத்தையும் வெர்ச்சுவல் கியூ கூப்பன் திட்ட இணையத்தில் பதிவு செய்யவேண்டும்.

முன்பதிவு செய்த பக்தர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், ஏதாவது ஒரு அடையாள அட்டை மற்றும் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் கூப்பன் ஆகியவற்றுடன் பம்பா செல்ல வேண்டும்.

அங்கு பக்தர்கள் கொண்டுசெல்லும் கூப்பன், மற்றும் அடையாள அட்டையை சோதனை செய்த பின்பு, பக்தர்களை பம்பாவில் இருந்து மலை ஏறுவதற்கு அனுமதிப்பர்.

கூப்பனில் பதிவு செய்யப்பட்ட அரைமணி நேரத்துக்கு முன்பாக சென்றால் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் பதினெட்டாம் படியை ஏறி சுவாமி தரிசனம் செய்து விடலாம்.

திட்டம் நீட்டிக்கப்படும்: இந்த கூப்பன் வசதி மூலம் காலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த முன்பதிவு வசதியைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் மூலம் ஒரு மணி நேரத்தில் 600 முதல் ஆயிரம் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்யலாம். இந்தத் திட்டத்துக்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பது சிறப்பம்சம்.

இப்போது நவம்பர் 29-ஆம் தேதி வரை உள்ள முன்பதிவு திட்டம், மண்டல பூஜை நிறைவடையும் தேதி வரை தொடரும். மேலும் 2014-ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் மகரவிளக்கு பூஜை வரை ஆன்லைன் முன்பதிவு திட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தகவல்களை 0471- 3243000, 3244000, 3245000 ஆகிய அவசர உதவி எண்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments