முகப்பு
தமிழ்நாடு

கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 6 பேர் படுகாயம்

 கடலூர் அருகே சூரப்பநாயக்கன்சாவடி மாரியம்மன் கோவில், ஆடி திருவிழா நடந்து வருகிறது.  வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை

Updated On : 9 ஆகஸ்ட், 2014 at 5:58 PM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:37 AM

கடலூர் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

 கடலூர் அருகே சூரப்பநாயக்கன்சாவடி மாரியம்மன் கோவில், ஆடி திருவிழா நடந்து வருகிறது.  வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை சாமி வீதியுலா நடைபெற்றது.  சாமி ஊர்வலத்தின் போது அப்பகுதியை சேர்ந்த சிலர் பட்டாசு வெடித்து வந்தனர். 

 அப்போது பட்டாசுகள் வெடித்து சிதறியதில் அப்பகுதியை சேர்ந்த சரவணன்(22). சுரேஷ்(25) உள்ளிட்ட 6 பேர் மீது தீப்பொறி பட்டு படுகாயம் அடைந்தனர். .

Advertisement

படுகாயம் அடைந்த அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புதுநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.