முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் மாவட்டத்தில் 104 தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் தொடக்கம் 

விருதுநகர் மாவட்டத்தில் 24 மணிநேரமும் செயல்படும் வகையிலான 104 தொலைபேசியின் மூலம் மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியின்

பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:21 AM

விருதுநகர் மாவட்டத்தில் 24 மணிநேரமும் செயல்படும் வகையிலான 104 தொலைபேசியின் மூலம் மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொலைபேசியின் மூலம் மையத்தை தொடர்பு கொண்டு நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை பெற்று பயன் அடையலாம்.

    தற்போது, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு பொதுமக்களிடையே சிறப்பான வரவேற்புள்ளது. அதைத் தொடர்ந்து 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை பெறும் வசதி நடைமுறைக்கு வந்துள்ளது. எந்த கைப்பேசியில் இருந்து தொடர்பு கொண்டாலும், அடுத்த குறிப்பிட்ட நேரத்திற்குள் 108 ஆம்புலன்ஸ் வாகனம் நோயாளிகளுக்கு உதவுகிறது.

    இதேபோல், பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் இலவச மருத்துவ ஆலோசனைகளை பெறுவதற்கு அரசு 104 என்ற தொலைபேசி எண்ணுடன் மருத்துவ சேவை மையத்தை தொடங்கியுள்ளது. இதற்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு இந்த எண் கொண்ட கைப்பேசிகளையும் அரசு வழங்கியுள்ளது.

Advertisement

    இந்த கைப்பேசி எப்போதும் தயார் நிலையில் மருத்துவரின் கண்காணிப்பிலேயே இருக்கும். எனவே பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு உடனே மருத்துவ ஆலோசனை தேவைப்பட்டால் 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். இச்சேவை விருதுநகர் மாவட்டத்திலும் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள 10 அரசு தலைமை மருத்துமவனைகள், 53 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஆட்சியர் உள்ளிட்டோருக்கு 104 எண் கொண்ட கைப்பேசிகள் வழங்கப்பட்டுள்ளன.

    இதற்கான கைப்பேசிகளை மாவட்ட அலுவலர்கள், மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஆகியோருக்கு வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தலைமை வகித்து, அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் கைப்பேசிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மருத்துவத்துறை இணை இயக்குநர் கதிரேசன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் சண்முகசுந்தரம் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.